மாணவர்களின் தலைமுடியை தாறுமாறாக வெட்டிய தலைமை ஆசிரியை

hairதிண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 3–ம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5–ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ் பிரகாஷ், நவீன் பிரதாப், நிர்மல், செபஸ்தியான் ஆகியோர் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு சென்றனர்.

இது குறித்து மாணவர்களிடம், பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது தலையில் முடி அதிகமாக வளர்ந்து இருப்பதாக கூறி, அந்த 5 பேரையும் அழைத்து தலைமை ஆசிரியை மாணவர்களின் தலைமுடியை வெட்டியதாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மேலும் தலைமை ஆசிரியையின் செயலை கண்டித்து பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திண்டுக்கல்லில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: , , ,

Leave a Reply