சிலருக்கு உடம்பில் மச்சம் இருக்கும். ஆர்யாவுக்கு மச்சத்திலேயேதான் உடம்பு இருக்கும் போலிருக்கிறது..!
– என்று சக நடிகர்கள் கமெண்ட் அடிக்குமளவுக்கு பெண்கள் விஷயத்தில் படு வீக்கானவர் ஆர்யா.
குறிப்பாக, அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு என்ன மந்திரத்தைப்போடுவாரோ….ஆர்யா மீது பித்துப் பிடித்து அழைய ஆரம்பித்துவிடுகிறார்கள் நடிகைகள்.
இதற்கு ஆர்யாவைவிட வயதில் மூத்தவரான அனுஷ்காவும் விதிவிலக்கில்லை.
‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா உடன் ஜோடி சேர்ந்த பிறகு அனுஷ்காவுக்கும், ஆர்யா மீது ஒரு இது. ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் நடந்ததால் இருவரும் ‘ஒன்றாக இருக்கும்’ வாய்ப்பு பல தடவை கிடைத்தது.
இப்போது இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அரிதாகிவிட்டநிலையில்…
ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும் ஆர்யாவைப் பார்க்க சென்னைக்கு ஓடோடி வந்துவிடுகிறார் அனுஷ்கா.
நேற்றும் அப்படித்தான்..!
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஹோட்டலுக்கு அனுஷ்கா உடன் ஹாயாக வந்திறங்கினார் ஆர்யா.
அதே ஹோட்டலில், கோச்சடையான் படத்தின் பிரஸ்மீட் நடப்பதும், அதற்காக நூற்றுக்கணக்கான மீடியாக்கள் அங்கே வந்திருப்பதும் ஆர்யாவுக்குத் தெரியாது.
அரை டிரவுசரை மாட்டிக் கொண்டு அனுஷ்கா உடன் ஒரு பழைய காரில் வந்திறங்கிய ஆர்யா, ஹோட்டல் வாசலில் நின்ற மீடியா ஆட்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.
வந்த வேகத்தில் காரை திருப்பிக் கொண்டு பறந்துவிட்டார்…!
வேற ஹோட்டலுக்குப் போயிருப்பார்..
















