14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்

kiss-sexஉலகில் 14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் 15 வயதிற்குட்பட்ட பெண்களில் 7.2 சதவீதமானோர் இவ்வாறு துன்புறுத்தல்கலுக்கு ஆளாகின்றனர். இது பெண்களின் சுகாதாரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெண்களின் பங்களிப்பானது பல்வேறு துறைகளிலும் கணிசமானளவு காணப்படுகிறது. இது பெண்களை வலுவூட்டுவதற்கான விசேட உந்து சக்தியாகவுள்ளது.

இதேவேளை பெண்களில் பிரதிநிதித்துவம் உயர்மட்டத்தில் இருக்கின்ற போதிலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

எனவே பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியலில் அதிகரிப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான புதிய சட்டங்களை உருவாக்கவேண்டிய காலம் வந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply