சொந்தப்பட சோதனை! : பாலாவுக்கு கை கொடுத்த விஜய் சேதுபதி

vijay-sethupathi-bala-370x260வருஷக்கணக்கில் படமெடுப்பார்; அதனால் தேவையில்லாத தெண்டச் செலவுகளை இழுத்து வைப்பார் என்றெல்லாம் சினிமாவுக்குள் ‘நல்ல’ பெயரை எடுத்தவர் டைரக்டர் பாலா.

அதனால் தானோ என்னவோ ‘அவன் – இவன்’ படத்திற்குப் பிறகு தனது சொந்தக் கம்பெனி மூலம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கி விட்டார். ஏற்கனவே அதர்வாவை வைத்து ’பரதேசி’ படத்தை டைரக்ட் செய்து தயாரித்தார். பல பட விழாக்களில் பல விருதுகளை வாங்கிய இந்தப்படம் எதிர்பார்த்த வசூலை மட்டும் தரவில்லை.

இந்நிலையில் மீண்டும் சொந்தப்படம் தயாரிக்கும் பாலா, இந்தமுறை ஆனந்த் குமரேசன் என்பவரை டைரக்டராக அறிமுகப்படுத்துகிறார்.

‘வசந்த குமாரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது.

சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய
ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது,.

படத்தின் ஹீரோயின்கள் மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு அழகான காதல் கதையான இந்தப்படத்தை இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக தர இருக்கிறார் பாலா.

Tags: , ,

Leave a Reply