முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையடியுள்ளார்.
இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மதங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
சமயங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் சந்திரிகா ஈடுபட்டுள்ளார். தென்னாசிய பிராந்திய வலய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகம் என்ற பிராந்திய அமைப்பு ஒன்றின் முக்கிய பொறுப்பில் சந்திரிகா உள்ளார்.
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கண்காணிப்பு திட்டம் தொடர்பான அறிக்கையை இச் சந்திப்பின் போது கையளித்தார்.
இலங்கையில் பிரதான மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காணிப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமது கண்காணிப்பு திட்டம் அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்புடனும் கலந்துரையாடவுள்ளதாக சந்திரிகா தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தலைமைத்துவ பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
















