மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது – தமிழக அரசாங்கம்

Fishermenஇ;ந்திய மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என தமிழக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. நாளைய தினம் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.எனினும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என தமிழக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் தடுத்த வைக்கப்பட்;டுள்ள 177 தமிழக மீனவர்களையும் அவர்களது 44 படகுகளையும் விடுவிக்காது பேச்சுவார்த்தைகளை தொடர வாய்ப்பில்லை என ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Tags: , , ,

Leave a Reply