வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
பொதுநலவாய நாடுகள் தினத்தை முன்னிட்டு லண்டனில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் அமைச்சர் பீரிஸ், ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சமவுரிமை ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். முதலீடு, சுற்றாடல் பாதுகாப்பு, இளைஞர் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வெறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
















