தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரித்தானிய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், ராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான் கீன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி வில்லியம் வெனிஸ்டியன் அகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இரு நாடுகளினதும் ராஜதந்திரிகளை தனித்தனியாக சந்தித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான உத்தேச தீர்மானம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது
















