சர்வதேச விசாரணைகளுக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கிறீன் கட்சி

newzealand_flagஇலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு நியூசிலாந்து முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்நாட்டு கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு நியூசிலாந்தின் ஆதரவு அவசியமானது என கிறீன் கட்சியின் பேச்சாளர் ஜேன் லோகீ (Jan Logie) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்ற உள்ள தீர்மானத்திற்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும் என்பதனை தமது பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் உள்ள விசாரணைப் பொறிமுறைமைகள் குறித்து திருப்திகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை விவகாரம் குறித்து குரல் கொடுப்போருக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply