உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு 30 வயது.
விரேந்தர் அவரது வீட்டில், மனைவியிடம் அவர் சமைத்த உருளைக்கிழங்கு வறுவலில், ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று சண்டை போட்டு இருக்கிறார். சண்டை பெரிதாகி, வன்முறையில் ஈடுப்பட்ட விரேந்தர், அவர் மனைவியின் தலையை சுவற்றில் இடித்து இருக்கிறார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த அவரின் மனைவி உயிர் இழந்தார்.
விரேந்தருக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, அவருக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
















