பொறுப்புக் கூறும் விடயத்தை செயற்படுத்துகிறது இலங்கை; ஜெனிவாவில் கூறினார் சமரசிங்க

un-human-rights-council_0ஐ.நா. மனித உரிமைகள் சபை யில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள பொறுப் புக்கூறல் விடயம் குறித்து ஏற்கனவே கவனிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய பெருந்தோட்டத் தொழில் அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க இவ்வாறு விளக்கமளித்துள்ளார். இலங்கைக் குழுவின் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய அமர்வில் அமைச்சர் சமரசிங்க பங்குபற்றி வருகின்றார். இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த நகல் பிரேரணைக்கு எதிராக இலங் கையின் சார்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு அவர் விளக்கமளித்து வருகின்றார்.

ஜெனிவாவில் நேற்று ஆசிய – பசுபிக் பிராந்திய அங்கத்துவ நாடுகள் குழுவின் பிரதிநிதிகளுக்கும் அமர்வில் பார்வை யாளர் அந்தஸ்தோடு பங்கு பற்றும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அவர் இலங்கையின் நிலைப்பாடு குறித்து விளக் கினார். ஜெனிவாவில் ‘பலஸ் டீ ந­ன்ஸ்’ தொகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொறுப்புக் கூறல் விடயத்தில் போர் முடிந்த கையோடு மட்டு மல்லாமல், அதன் பின்னர் கடந்த ஐந்து வருடத்திலும் ஏற் பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்து இலங்கை அரசின் சார்பில் அவர் அங்கு விளக்கமளித்தார். இராணுவ நீதிமன்ற விசாரணை ஆயத்தின் முன்னால் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆயத்தின் விசாரணைப் போக்குகள், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் “அக்ன் பாம்’ தொண்டு நிறு வன ஊழியர்கள் கொல்லப்பட்டமை சம்பந்தமாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேற் பார்வையில் முன்னெடுக்கப் பட்ட நடவடிகக்கைகள் ஆகியன குறித்து அவர் அங்கு விளக்கமளித்தார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவும் தனக்கு வழங்கப்பட்ட ஆணையின் இலக்கை எட்டுவது தொடர்பான நடவ டிக்கைகளில் தெளிவான முன்னேற்றமடைந்திருப்பதாக அவர் அங்கு சொன்னார். நல்லிணக்கத்தை எட்டுவது தொடர்பான திசையில் நகரும் போது தற்போதும், எதிர்காலத்திலும் தான் எதிர்நோக்கிய, எதிர்நோக்க வேண்டியிருக் கின்ற சவால்களையும் அவற்றைத் தாண்டுவதில் முகம் கொடுத்த அனுபவங்களையும் இலங்கை சர்வதேச சமூகத்துடன் பரிமாறிக் கொண்டிருப்பதன் மூலம், அதனுடன் தொடர்ந்து தொடர்பாடல் கொண்டு வந்துள்ளது என்றார் அவர். அவ்விடயங்களில், இடம் பெயர்ந்தோரை மீளக்குடியமர்தல், உள்கட்டுமானங்களை மீளமைத்தல், சிவில் நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டு வருதல், முன்னர் போர் இடம்பெற்ற இடங்களில் ஜனநாயகக் கட்டமைப் புகளுக்கு மீண்டும் உயிரூட் டுதல், முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்தல் ஆகியவையும் அதற்கப்பால் பொருளாதார வளர்ச்சியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துதல் போன்றவையும் அடங்கும் என்றார் சமரசிங்க. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி விளக்கிய அவர் குறிப்பாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பான தேசிய திட்டத்தின் செயற்பாடுகள், மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான தேசிய செயற்றிட்டம் போன்றவற்றில் கிட்டியுள்ள முன்நகர்வுகளைத் தெளிவுபடுத்தினார். பரந்தளவிலான நல்லிணக் கத்துக்கு இந்தக் குறுகிய காலத்துக்குள் இலங்கை இவ்வளவு தூரம் திடசித்தத்துடன் செய லாற்றி, தன் நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கும் போது, அத்தகைய ஒரு தேசத்துக்கு இவ்வாறான பிரே ரணையையா பதிலாக அளிப்பது என்று அங்கு அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: , ,

Leave a Reply