இலங்கை மீனவர்கள் ஐவர் சென்னையில் கைது

srilankan fishersசென்னையின் வட, கிழக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர் ஐந்து பேரை இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்

குறித்த மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மீனவர்களை சென்னை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர் சங்கங்களுக்கிடையிலான சந்திப்பு நாளை 13 ஆம் திகதி வியாழக்கிழமை காலை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply