
தொடர் தோல்வி அப்படியே நம்மை வீட்டில் ரெஸ்ட் எடுக்க வைத்து விடுமோ? என்று பயந்த சூர்யாவுக்கு ‘சிங்கம் – 2′ கை கொடுத்தது. அப்பாடா.. பொழைச்சோம்டா சாமி… என்று நெஞ்சை நிமிர்த்திய அவர் அடுத்து எந்த டைரக்டருடன் கை கோர்க்கப் போகிறார் என்பது தான் எல்லோருடைய ஆவலாகவும் இருந்தது.
அந்த நேரத்தில் தான் கெளதம்மேனனுடன் ஒரு படத்தில் கமிட்டாகி பின்னர் பணச்சிக்கலில் இருக்கும் அவருடன் இப்போது பயணிப்பது சரியில்லை என்று உணர்ந்தார் சூர்யா.
பூஜைவரை போன அந்தப்படம் அப்படியே நின்று விட்டது. கெளதமின் கதை பிடிக்காமல் சூர்யா விலகிவிட இப்போது லிங்குசாமியுடன் இணைந்து அஞ்சான் என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் அதுவும் சில பிரச்சனைகளால் ஷூட்டிங் நின்று நின்று நடந்து கொண்டிருக்க, அந்த ‘கேப்’பில் தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறார்.
சூர்யாவுக்கு கதை சொல்ல சில பெரியபெரிய ஹிட் டைரக்டர்களும் கூட வந்து போகிறார்களாம். அவர்களுக்கென்றே மெனக்கிட்டு நேரத்தை ஒதுக்கி கதை கேட்கிறார். ஆனால் அவை எதுவுமே சூர்யாவிற்கு பிடிக்கவில்லை.
எல்லோருமே மசாலா, ஆக்ஷன் என்று ஹரி பார்முலா கதைகளையே சூர்யாவிடம் ப்ளே செய்வதால் டென்ஷனாகும் அவர் என்னய்யா..? கதை சொல்றீங்க…, ஏதாவது புதுசா சொல்லுங்க… இல்லேன்னா சும்மாக்கூட நான் இருக்கிற ஏரியாப்பக்கம் வந்துறாதீங்க… என்று அடித்து விரட்டாத குறையாக திருப்பி அனுப்பி விடுகிறாராம்.
அதானே, ஒரு நாலு படம் கண்டினியூவா ப்ளாப் கொடுத்துப் பாருங்க அப்போதான் சூர்யாவோட வலி தெரியும்
















