இன்று நடக்க இருந்த பேச்சு திடீர் நிறுத்தம்

meeting

இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் இன்று கொழும்பில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற மாட்டாது என கடற்றொழில் அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்தியத் தரப்பினர் இன்றைய பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாகத் தெரிவித்து, வேறு ஒரு திகதியைக் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் தமிழகப் பிரதிநிதிகள் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்திருந்த எச்சரிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனச் சுட்டிக்காட்டிய நரேந்திர ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றார்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை மீனவர்களும் அவர்களுடைய 5 படகுகளும் அங்குள்ள நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு இந்தியத் தூதரகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அதிகாரபூர்வமாகக் கடிதம் கிடைக்கவில்லை.

மேலும் முதல் கட்ட பேச்சில் எட்டப்பட்ட இணக்கத்தை இந்திய மீனவர்கள் மதிக்கத் தவறிய காரணத்தால் கொழும்புப் பேச்சுக்கு முன்னர் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கூடாதென நாம் தெரிவிக்கிறோம். எனினும் அங்கு தேர்தல் முடிவடைவதற்கு முன்பாக மீண்டும் பேச்சுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என வடபகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்வரும் 18ம் திகதி பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இரு நாட்டு மீனவர்களுடைய பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply