இந்தியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பயணித்த மினிபஸ் டிரக் வண்டியொன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
எட்டு நாட்களுக்கு முன்னர் புதுடில்லி வந்த இச் சுற்றுலாப் பயணிகள், தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக ஆக்ரா வழியாகச் சென்று கொண்டிருந்தபோது யமுனா நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை விபத்திற்குள்ளாகினர்.
காயமடைந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் (வயது 63) ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சுற்றுலாப் பயணிகளும் பஸ் சாரதியும் கைலாஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















