
ரஜினி நடித்த ’கோச்சடையான்’ படம் ஒரு கார்ட்டூன் படம் என்று பரவும் வதந்தியால் செளந்தர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் அந்தப் படத்தின் ட்ரெய்லரை
ரெண்டே நாட்களில் சுமார் 12 லட்சம் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த கெட்டப்பில் வந்தாலும் அவருக்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் இம்மியளவும் குறையவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அன்று மதியமே ‘கோச்சடையான்’ பட டிரெய்லரும், பாடல்களும் யு- டியூப்பில் வெளியிடப்பட்டன.
அந்த ட்ரெய்லரை வெறும் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் பார்த்து ரசித்துள்ளனர். அதில் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் ட்ரெய்லர் அட்டகாசமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே யு-ட்யூப்பில் ‘கோச்சடையான்’ ட்ரெய்லர் மற்றும் பாடல்களைப் பார்த்த ரசிகர்களில் சிலர் இது ஒரு கார்ட்டூன் படம் தான் என்று நினைத்துக் கொண்டதாக வதந்தி பரவியுள்ளது. இதனால் அந்தப்படத்தின் டைரக்டரும், ரஜினி மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இப்படி வதந்தி பரவினால் ரிலீஸ் நேரத்தில் பிஸினஸ் பாதிக்கப்படுமே என்றும் பரிதவிப்பில் உள்ளார்.
அசைவு பதிவாக்க தொழில்நுட்பம் என்று சொல்லக்கூடிய 3 டி மோஷன் பிக்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தில் இந்தப்படம் தயாராகி உள்ளதால் ரஜினியை திரையில் ரசிகர்கள் நேரடியாக பார்க்க முடியாது. அனிமேஷன் அசைவுகளாகத்தான் பார்க்க முடியும்.
முன்னதாக ‘கோச்சடையான்’ படம் ஒரு கார்ட்டூன் படமில்லை. அது ஒரு அனிமேஷன் படம். அந்த மனநிலையோடு தான் ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வேண்டும். வழக்கமான ரஜினி படத்தில் இருக்கின்ற அம்சங்கள் இதிலும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வரக்கூடாது. என்று டைரக்டர் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் அந்தப்படத்தின் ஆடியோ பங்ஷனிலேயே ரசிகர்களுக்கு உஷார் டிப்ஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 125 கோடி செலவில் தயாராகியுள்ள இந்தப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
அதுக்குள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வெச்சுடுங்க செந்தர்யா…
















