உள்ளூர் சுவையில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் BreadTalk

bread-talkசிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சர்வதேச வியாபார நாமமான ப்ரெட்டோக் குறிப்பிட்ட வாடிக்கையாளரே செல்லும் உணவகம் என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் விதத்தில் ஏற்ற விலைகளில் பல விதமான கேக் வகைகள் மற்றும் பன் (bun) வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் சீனி சம்பல், வெஜிடபிள், முட்டை, டெவில்ட் ஃபிஷ் பன் (bun) வகைகளும் கேக்வகைகளில் வெல்வெட்டி சொக்கலேட், வனிலா, றிபன், சொக்கலேட் ஃபட்ஜ் கேக் ரகங்களும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் பரந்தளவான வாடிக்கையாளரை ப்ரெட்டோக் எட்ட முடியும்என எதிர்பார்க்கப்படுவதுடன் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் இந்தப் புதிய அறிமுகங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்ததை ப்ரெட்டோக் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது.

உறைப்புச் சுவையோ அல்லது இனிப்பான சுவையோ எதுவேண்டுமானாலும் ப்ரெட்டோக்கில் பெற்றுக்கொள்ள முடியும். ப்ரெட்டோக்கின் அனைத்து கிளைகளிலும் இந்தப் புதிய பன் வகைகளும் கேக் வகைகளும் கிடைக்கின்றன.

இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் ப்ரெட்டோக்கை தயாரிப்புக்களையும் அதிகமாக உள்வாங்கச் செய்வதே இதன் நோக்கம்

Tags: , ,

Leave a Reply