இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை முனைப்புக்களை தொடர முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.எனினும், இறுதி நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக 177 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது 44 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதில்; 116 இந்திய மீனவர்களையும், 26 படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி பேச்சுவார்த்தைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என ஜெயலலிதா திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
















