வீட்டுச் சுவரை துளையிட்டு பெண்களை ரகசியமாக பார்த்த இளைஞர்கள்!

abuse-230x200
டெல்லியில் ஒரு ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வரும் இரண்டு இளம்பெண்களின் வீட்டிற்கு அருகே வசிக்கும் வாலிபர்கள் வீட்டின் சுவரில் துளைபோட்டு இந்த பெண்களை ரகசியமாக பார்த்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிப்பூரை சேர்ந்த இரு இளம்பெண்கள் குர்கோனில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள மஹிபல்பூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர்.

ந்நிலையில், இரண்டு நாட்களுக்கு இந்த இரு பெண்களில் ஒருவர் இவர்கலச்து வீட்டு சுவற்றில் ஒரு சிறு துளையிடப்பட்டிருந்ததை கண்டார். அர்கே சென்று பார்த்தபோது, அந்த துளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர்களால் போடப்பட்டது என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளித்த அப்பெண்கள், பக்கத்தி வீட்டில் வசிக்கும் வாலிபர்கள் தங்களை ரகசியமாக பார்க்க இதனை செய்துள்ளதாகவும், அவர்கள் அடிக்கடி தங்கள் வீட்டை கதவை தட்டி தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறையினர் விகாஸ் மற்றும் ஜானி ஆகிய இருவரையும் கைதுச் செய்துள்ளனர்.

இவர்களில் விகாஸ் என்பவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply