நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது – ஜனாதிபதி

Mahinda-Rajapakseநாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் மத முரண்பாடுகள் காணப்படுவதாக சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்து அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாக சில தரப்பினர் போலிப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களின் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply