ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதரவளித்திருந்தால் நாடு எப்போதோ பிளவடைந்திருக்கும் என கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்;ச்சியாக செயற்பட்டமையே, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள், முஸ்லிம்களை கொன்றதுடன், அவர்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு, முஸ்லிம்களை வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு மேர்வின் சில்வா போன்ற நாட்டை கேவலப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோற்றுப் பொதி ஒன்றுக்காக களனியைச் சேர்ந்த சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேர்வின் சில்வா போன்றவர்களே நாட்டுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

















