கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற MH370 என்ற விமானம் மாயமானது. இப்போது வரை அந்த விமானத்தில் நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டறியும் நோக்கில் மலேஷிய அரசு மூட நம்பிக்கையை கையில் எடுத்துள்ளது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
பல நாடுகள், சுமார் 40 கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போன விமானத்தை தீவரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், MH370 விமானத்தை கண்டுபிடிக்க ‘witch doctor’ என்று அழைக்கப்படும் நபரின் உதவியை நாடியுள்ளது.
மலேஷிய அரசின் அழைப்பை ஏற்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் மூங்கில் பைனாகுலர்கள் மற்றும் மீன் பிடிக்கும் உபகரணங்களை வைத்து இப்ராஹிம் மத் ஜின் என்னும் அந்த நபர் பூஜை செய்துள்ளார்.
















