இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற சர்வதேச விசாரணையை உள்ளடக்கியதான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இந்தியா தனித் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் ஆரம்பித்துள்ளனர். ஐ.நா. சபையின் நடப்பு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள் ளது. குறித்த தீர்மான வரைவு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்தேச விசாரணையைக் கோரவில்லை. இந்தநிலையில், போர்க் குற் றங்கள் தொடர்பிலான சர்வ தேச விசாரணையையும், தமிழீழத்துக்கான பொதுவாக் கெடுப்பையும் உள்ளடக்கியதாக இந்தியா தனித் தீர்மா னம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர் களால் பல்வேறு போராட் டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாலசந்திரன் மாணவர் இயக்கத்தினாலேயே குறித்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாகவே திருச்சி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 12 சட்டக் கல்லூரி மாணவர்கள், திருச்சி அரச சட்டக் கல்லூரி முன்பாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
















