4 மணி நேரம் உட்கார்ந்து மேக்கப் போட்டா, அதை காப்பின்னு சொல்லுவீங்களோ? : கமல் கடுப்பு!

kamal-anumol-370x260
‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டர் காப்பியில்லை என்றும், மேக்கப் போடுவது அவ்வளவு ஈஸியான வேலை இல்லை என்றும் கொதித்தெழுந்திக்கிறார் நடிகர் கமல்.

‘உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்கப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் கேரளாவில் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் கமலிடம் இதுபற்றி கேட்டபோது அவர் செம கடுப்பாகி பதில் சொல்லியிருக்கிறார்.

‘தெய்யம்’ என்ற பழங்கால கலை 1000 வருடங்களாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3-வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்கப்பை போட்டார். ஒரு காதல்ஜோடி மார்பில் தலைவைத்த படி போஸ் தந்தால் அது ‘ஏக் துஜே கே லியே’ போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா? உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கூத்து கலையுடன் கலந்த கலவையாக தெய்யம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது.

நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல. என் முகத்தின் மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது. முகத்தில் பெயின்ட்டால் மேக்கப் போடுவது சாதாரண விஷயம் கிடையாது. என்று கடுப்பாகியிருக்கிறார் கமல்.

Tags: , , , ,

Leave a Reply