
அய்ய்யா… எங்கிணத்தைக் காணோம்ங்கிற ரேஞ்சில் ‘நையாண்டி’ பட தொப்புள் விவகாரத்தில் உலக லெவல் ஃபேமஸ் ஹீரோயின் ஆகி விட்டார் நஸ்ரியா. நடித்த படங்கள் ரெண்டோ, மூணோ தான். ஆனால் அதற்குள் பாசில் மகனோடு நிஜ லவ்வில் சிக்கி இப்போது அவரோடு மேரேஜ்க்கு தயாராகி வருகிறார்.
இனி தமிழில் நஸ்ரியாவின் ஆட்டம் அவ்ளோதான் என்று சக ஹீரோயின்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிற்கையில் ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் ஆடியோ பங்ஷனுக்காக அந்தே சந்தோஷ மூடில் வந்திருந்தார்.
சினிமாவில் மட்டுமில்லை, நிஜத்திலும் நஸ்ரியா ஒரு விவகாரமான ஆளு தான் என்று உதாரணம் சொன்னார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சஷிகாந்த்.
இந்த படத்துக்காக நஸ்ரியாவை புக் பண்ணினப்போ நெறைய புரொடியூசர்ஸ் என்கிட்ட ‘அந்தப் பொண்ணா? எதுக்கு உங்களுக்கு வீண் வம்பு? வேற ஏதாவது புதுப்பொண்ணா பார்க்க வேண்டியது தானே? என்று பயமுறுத்தினாங்க. ஆனால் என்னோட புரொடக்ஷன் பேர் மாதிரியே ஒய் நாட் ஏன் அவரை நடிக்க வைக்கக் கூடாது? என்று முடிவு பண்ணி அடுத்த நிமிஷம் அவரை கமிட் பண்ணிட்டேன்.
மத்தவங்க சொல்ற மாதிரியெல்லாம் நஸ்ரியா மோசமான பொண்ணு இல்ல. ஒரு நடிகையா அவங்க வேலையில் அவங்க ரொம்ப சரியா இருக்காங்க. அதை தாண்டி ‘தேவையில்லாம’ அவங்ககிட்ட நெருங்கினா தான் பிரச்சனையாயிடும் என்றார்.
பின்னர் பேசிய மம்முட்டியின் மகனும், ஹீரோவுமான துல்கர் சல்மான் “ எனக்கு சென்னை எப்பவுமே ஸ்பெஷல் தான். ஏன்னா நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே இங்கே தான்.
ஸோ என்னோட அப்பாவுக்கு நீங்க எப்படி ஆதரவு கொடுத்தீங்களோ? அதேமாதிரி எனக்கும் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன் என்றவர் நஸ்ரியாவிடம் மட்டும் ஒரே ஒரு கோரிக்கையை வைத்தார்.
நானெல்லாம் இந்தப்படத்துல நடிக்கிறதுக்கு அவ்ளோ டெடிகேஷனா ஹோம் ஒர்க் பண்ணினேன். ஆனா நஸ்ரியா அப்படி கிடையாது. ஷாட் வைக்கிற வரைக்கும் டைரக்டர், கேமராமேன் எல்லாரையும் கலாய்ச்சி அரட்டையடிச்சிக்கிட்டிருப்பாங்க. ஷாட் ரெடியானதும் டேக் வாங்காம நடிச்சிட்டுப் போயிடுவாங்க, அந்தளவுக்கு அவங்க நல்ல டெடிகேஷனான நடிகை. அவங்களுக்கு சீக்கிரமே மேரேஜ் நடக்கப் போவுது. அவங்க நடிக்கிறதை நிப்பாட்டிடக்கூடாது, மேரேஜ்க்கு அப்புறமும் நடிப்பை கண்டினியூவ் பண்ணனும். அதுதான் என்னோட ஆசை என்றார்.
துல்கரின் பேச்சைக் கேட்டு சந்தோஷத்தில் நெளிந்த நஸ்ரியா, ‘துல்கர் சொன்னது மாதிரி மேரேஜ்க்கு அப்புறமும் நான் நடிப்பேன், பட் இதைப்பததி என்னோட ஹஸ்பெண்ட்டுக்கிட்ட மெனக்கிட்டு எதுவும் பேசல, ஆனா கண்டிப்பா நடிப்பேன்’ என்றார்.
அப்போ உங்களோட அளப்பறை இன்னும் முடியலையா..?
















