இந்தியாவில் ஒரு தாய்க்கு இரண்டு தலை, இரண்டு கழுத்து, இரண்டு ஸ்பைனல்கார்டுடன் கூடிய ஒரு குழந்தைக்கு ஒரேஒரு உடம்பு மட்டுமே உள்ளதாக இருக்கின்றது. இந்த அதிசயக்குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறனர்.
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் Cygnus JK Hindu Hospital என்ற மருத்துவமனையில் ஊர்மிலா சர்மா என்ற 28 வயது பெண்ணுக்கு நேற்று ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவம் பார்த்த மருத்துவர் மாலிக் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் ஊர்மிளாவுக்கு பிறந்த அந்த குழந்தைக்கு இரண்டு தலை, இரண்டு கழுத்துடன் ஒரே ஒரு உடல்பகுதி பட்டுமே இருந்தது. இரட்டை குழந்தைகள் உருவாகி அதன்பின் ஒன்றாக வயிற்றிலேயே இணைந்துள்ளது தற்போது தெரிய வந்தது.
இந்த குழந்தையின் தாய் ஊர்மிளா மற்றும் சுபாஷ் அவர்கள் கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய ஸ்கேன் போன்ற வசதிகளை பயன்படுத்தும் அளவுக்கு வசதி இல்லாததால், அப்படியே விட்டுவிட்டனர். இந்த குழந்தை தற்போதுவரை உயிருடன் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில்தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களால் முடிந்த அளவுக்கு பெரும் முயற்சி செய்த் இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்
















