உலகிலுள்ள சகல முஸ்லிம் நாடுகளும் இலங்கையை ஆதரிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நாடுகள் உண்மையை அறிந்து வைத்துள்ளதன் காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சிலத்தரப்பினர் முஸ்லிம் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்ற உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காலியில் உள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

















