புகையிரதம் மோதி கொடிகாமம் பகுதியில் இன்று காலை 8.45 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம். பெரிய நாவலடி வீதியில் இருந்து பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக A9 வீதிக்கு செல்ல முட்பட்ட போது புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் மோதியதிலே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த சிவராஜா ஜெகன் (வயது 32) சம்பவத்தில் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
















