இலங்கையின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது – கலம் மெக்ரே (வீடியோ இணைப்பு)

callum-macrae-channel-4இலங்கையின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மெக்ரே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாளுக்கு நாள் முன்னேற்றப்பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மோசமான திசையை நோக்கி நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்படாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்பட்ட வருவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதிலும், உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமையை காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டு பிடித்துக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரி போராட்டங்களை நடத்திய முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவரும் அவரது 13 வயது சிறுமியும் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களின் மூலம் நாட்டின் மனித உரிமை நிலைமையோ, கருத்துச் சுதந்திரமோ மேம்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply