தன்னை யாருமே வெறுக்கக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி. அதுமட்டுமல்ல, தன்னை எதிரியாக எண்ணுபவர்களிடம் கூட அன்பு செலுத்துவார், நட்பு பாராட்டுவார்.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பற்றி அவதூறாகப்பேசி வந்த வேலுபிரபாகரன் போன்றவர்கள் எல்லாம் பின்னாட்களில் ரஜினியைப் பற்றி சிலாகித்துப்பேசவும், ரஜினியின் இந்த குணம்தான் காரணம்.
பாபா படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைத்ததும் கூட,அவரது இந்த இரக்க குணம்தான் காரணம். அதுவே அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்தது.
ரஜினி படத்துக்குப் போஸ்டர் ஒட்டியவன் கூட, ரஜினியால் எனக்கு நஷ்டம் என்று சொல்லுமளவுக்கு நிலவரம் கலவரமானது.
ரஜினியை வைத்து கோடிகோடியாய் சம்பாதித்த விநியோகஸ்தர்கள் எல்லாம் நஷ்ட ஈடு என்ற பெயரிலும் ரஜினியிடம் பெரும்தொகையை பிடுங்கிக் கொண்டனர்.
கோச்சடையான் விஷயத்தில் இப்படிப்பட்ட கொள்ளையடிப்பு வேலைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி.
அதற்காக மிகப்பெரிய சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து, சில நடைமுறைகளைப் பின்பற்றும்படி தயாரிப்பாளர் மீடியா ஒன் ஜெயக்குமாரிடம் கூறி இருக்கிறாராம்.
அதன்படி, கோச்சடையான் பட வியாபாரம் கறுப்புப் பணத்தில் நடக்கக் கூடாது.
முழுக்க கணக்கில் வர வேண்டும்.
யாரிடமும் ரொக்கமாக வாங்கக் கூடாது
டி.டி.யாக மட்டுமே பண பரிவர்த்தனை நடக்க வேண்டும்
இந்த வியாபாரம் தொடர்பாக பின்னாட்களில் நஷ்டஈடு என்று கேட்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும்
உட்பட பல நிபந்தனைகளை வித்திருக்கிறார்.
இதற்கெல்லாம் உடன்படுகிறவர்களுடன் மட்டுமே கோச்சடையான் படத்தை பிசினஸ் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம்.
ரஜினியின் இந்த மாஸ்டர்பிளான்படி, நஷ்டஈடு கேட்டு எந்த விநியோகஸ்தரும் தன் வீட்டுப்பக்கம் வரக்கூடாது..! என்ற சூழ்நிலையை ஏற்படுத்த இருக்கிறாராம்.
















