எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

vala-sch2பொருளாதார ரீதியில் கல்வியைத் தொடர முடியாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக் கல்வியுடன் இணைக்கும் நோக்குடனும், பிரதேச செயலகப் பிரிவில் இடைவிலகலை முற்றாக் ஒழிக்கும் நோக்குடனும் வாழைச்சேனை பிரதேச செயலகம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
vala-sch1

vala-sch3
இவ்வகையில் எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், எஸ்கோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags: ,

Leave a Reply