இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல – சம்பந்தன்

sambanthan_tna

இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் கிடையாது என அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில முக்கியமாக ஆற்றப்படவிருந்த கடமைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கத் தவறியுள்ளமையை சுட்டிக்காட்டுவதே நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் வலுவான, ஸ்திரமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக கருதப்பட்ட போதிலும், பிழையான பாதையில் செல்வதே வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.வட மாகாண ஆளுனரின் மீது தனிப்பட்ட குரோதங்கள் எதுவும் கிடையா என அவர் தெரிவித்துள்ளார்.எனினும், இராணுவ அதிகாரியொருவர் அதுவும் அரசாங்கத்திற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒருவரை ஆளுனராக நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பல்வேறு பொதுமக்கள் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.மாகாணசபை முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply