இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 177 மீனவர்களையும், 32 படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பெரும்பாலும் எதிர்வரும் 25ம் திகதி இரு நாடுகளினதும் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















