கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள Waterloo என்ற நகரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,400 பீர் கேன்களை ஒண்டோரியோ போலீஸார் அதிரடி சோதனையின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.
மாணவர்கள் குழு ஒன்று விரைவில் நடக்கப்போகும் St. Patrick’s Day party, தினத்தில் தங்கள் சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஒரு வீட்டில் சுமார் 4,400 பீர் கேன்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்த போலீஸார் அனைத்து பீர் கேன்களையும் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் பீர் கேன்களை பதுக்கி வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Ontario’s Liquor Licence Act சட்டத்தின்படி ஒரு உரிய அனுமதியின்றி ஆல்கஹால் விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மாணவர்கள் லாப நோக்கத்திற்காக அல்லாமல், தங்கள் சக மாணவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வைத்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் ஃபேஸ்புக் மூலம் தாங்கள் 4,400 பீர் கேன்களை வைத்திருப்பதாக கொடுத்த தகவல்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















