மக்கள் ஆடைகளை மாற்றுவது போன்று ஐக்கிய தேசியக் கட்சி கொள்கைகளை மாற்றிக் கொள்வதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டுமே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசாங்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்ட கொள்கைகளே இன்று வரையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி ஒவ்வொரு முக்கிய தேர்தல்களிலும் கொள்கைகளை மாற்றி மாற்றி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

















