ஹன்ஷிகா ஹீரோயினாத் தானே நடிச்சாங்க; அது தப்பா..? : சிம்புவை ‘நோஸ்கட்’ செய்த சிவகார்த்திகேயன்!

siva-hansika
சிம்புவும், ஹன்ஷிகாவும் காதல் ஜோடிகளாக கோடம்பாக்கத்தில் உலா வந்தபோது ஹன்ஷிகாவை தனது கஸ்டடியிலேயே வைத்திருந்தார் சிம்பு என்றார்கள்.

அதிலும் குறிப்பாக ஹன்ஷிகா கமிட் செய்கின்ற படங்களில் யார் ஹீரோ என்பதைப் பார்த்து அந்தப் படத்தில் ஹன்ஷிகா நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை சிம்பு தான் முடிவு செய்ததாகவும், அப்படித்தான் சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்ஷிகா நடிக்க சிம்பு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள்.

அதனால் தான் இந்தப்படத்தை ஆரம்பித்தபோது அவசரம் அவசரமாக ஒரு பிரஸ்மீட் வைத்து ஹீரோயினாக ஹன்ஷிகாவை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலைகளெல்லாம் தடபுடலாக நடந்தது.

சிம்புவின் இந்த அளப்பறைக்கு பதில் சொல்லும் விதமாக ‘மான் கராத்தே’ ஆடியோ பங்ஷனில் சிம்புவை ‘நோஸ்கட்’ செய்தார் சிவகார்த்திகேயன்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது :

நான் யாரையெல்லாம் ரசிச்சேனோ, யாரையெல்லாம் ரோல் மாடலா எடுத்திருக்கேனோ அவங்க கூடயெல்லாம் சேர்ந்து இந்த மேடையில இருக்கிறது எனக்கு பெருமையான விஷயம்.

முருகதாஸ் சாரோட படத்திலேயும், ஷங்கர் சாரோட படத்திலேயும் நடிக்கிறது என்னோட ஒரே குறிக்கோள். எதிர்நீச்சல் படத்துல நடிக்கும் போதே எனக்கு இந்த ஆசை இருந்துச்சு. இதை ஒருத்தர் கேள்விப்பட்டுட்டு ஓய் நீ ரொப்ப ஓவரா ஆசைப்படுற. உன்னோட படங்கள் ஓடுதுங்கிற ஒரே காரணத்துக்காக நீ இப்படியெல்லாம் ஆசைப்படுவியான்னு கேட்டார்.

ஏன் அப்படி ஆசைப்படக்கூடாதுன்னு தெரியல. அவங்க படங்கள நடிக்கணும்னா அதுக்கான திறமையும், வியாபாரமும் ரொமப் பெருசு. அதனால தான் ரொம்ப பொருமையா ஒவ்வொரு படமா பண்ணிக்கிட்டு எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டிருக்கேன். கடந்த 8 மாசமா இந்த ஒரே ஒரு படத்துல மட்டும் தான் நடிச்சேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கப்புறம் நடிக்கிற படம் நல்ல சரியான படமா இருக்கணும்னு நெனைச்சேன். நான் நெனைச்ச மாதிரியே இந்த மான் கராத்தே படம் எனக்கு அமைஞ்சது. இதுல இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா..? இது முருகதாஸ் சாரோட கதைன்னு சொன்னாங்க. அதைக்கேட்டப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஏன்னா இதுவரைக்கும் நான் நடிச்ச எல்லாப்படங்களிலும் உன் படத்துல காமெடி மட்டும் தான் இருக்கு. கதையே இல்லியேப்பான்னு சொன்னாங்க. அந்தக்குறை இந்தப்படத்துல சரியாயிடும்னு நெனைக்கிறேன்.

சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு டீம் தான் காரணம். நம்மளோட கடின உழைப்பு ஒருபக்கம் இருந்தாலும் நல்ல டீம் அமையும் போது ஜெயிக்கலாம்னு நெனைக்கிறேன். அதை சிலபேர் லக்குன்னு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கி தான்.

அப்புறம், படம் ஆரம்பிக்குபோது இருந்த பெரிய கேள்வி? இந்த படத்துக்கு ஹன்சிகா தான் ஹீரோயின்னு சொன்ன உடனே யப்பா இவனை பாருப்பா… பயங்கர மச்சத்த… ஹீரோயின் ஹன்ஷிகாவாம்ப்பா… சொன்னாங்க. அவங்க எங்கூட ஹீரோயினாத்தானே நடிச்சாங்க. அது ஒரு பெரிய தப்பா..? என்றார் சிவகார்த்திகேயன்.

எல்லாமே முடிஞ்சுப்போச்சு இப்போ சொல்லி என்ன பிரயோஜனம்?

Tags: , , ,

Leave a Reply