கிளிநொச்சியில் இன்று உதயநகர்,கனகபுரம் பகுதிகளில் சுற்றிவளைப்பும் – சோதனைகளும்.

lk-army

கிளிநொச்சியில் இன்று(19) நகரை அண்டிய கிராமங்களான கனகபுரம்,மற்றும் உதயநகர் பிரதேசங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களும்,சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று இரவு முதல் மேற்படி கிராமங்களில் படையினர் ரோந்து நடவடிக்;கைகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை கிராம அலுவலருடன் வீடு வீடாக சென்று குடும்ப பதிவு அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை பரிசீலித்து ஆட்களை குடும்ப அங்கத்தவர்களை உறுதிப்படுத்திக்கொள்ளவதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்து அறைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

அத்தோடு வெளியிடங்களிலிருந்து புதிதாக எவரும் வந்து தங்கியுள்ளனரா எனவும் விசாரித்து வருவதோடு அவ்வாறு யாரேனும் இருப்பின் உடனடியாக தங்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறிச்செல்லவதாக மேற்படி கிராமங்களின் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , , ,

Leave a Reply