ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள சாயக்கழிவு செல்லும் தொட்டியில் வால்வு அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய தொழிலாளர்கள் 3 பேர் முதலில் இறங்கினர். உள்ளே சென்றவர்கள் திரும்ப வராததால் வெளியே இருந்த மேலும் 4 பேர் இறங்கியுள்ளனர்.
இதில் விஷ வாயு தாக்கியதில் 7 பேரும் இறந்தனர். இதனையடுத்து உடல்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு தேவையான முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் எஸ்.பி., மற்றும் மாசுகட்டுப்பாடு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

















