தித்திக்கும் தேன் சொல்லும் சோகக்கதை!

thean

மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன்.
அன்றாட வாழ்வில் உணவுகளுடன் சேர்த்து தேன்களை ருசிக்கும் மனிதன் இந்த தித்திப்பான தேன் எவ்வாறு நம்மை வந்து சேர்ந்தடைகின்றன என்ற கதையை அவசியம் தெரிந்துகொள்ளதான் வேண்டும்.

தேன் வகைகளில் சுத்தமான தேன் என்று பல்வேறு கடைகளிலும், பல்வேறு இடங்களிலும் கூவி கூவி விற்றாலும் உண்மையான தேன் என்றால் அது மலைத்தேன் தான்.

அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கலப்படமற்ற தேனாக இந்த குரூங் தேனை தான் சொல்கிறார்கள்.

நேபாள் நாட்டைச் சேர்ந்த தேன் வேட்டையர்களால் தான், நாம் இந்த தேனினை சுவைத்து மகிழ்கின்றோம்.

நேபாள் நாட்டைச்சேர்ந்த குர்காகாரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து மலைப்பகுதிக்கு சென்று இந்த தேனை கொண்டு வருகின்றனர்.

இவர்கள், இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்துகொண்டு ஏணியின் வழியாக தேனியின் இருப்பிடத்தை அடைவர்.

அங்கு சென்று தீப்பந்தத்தை தேன் கூட்டின் மேல் காட்டும்போது, தேனீக்கள் பறந்துவிடும், பின்னர் தேன் கூடு கீழே விழும் நிலையில் இருக்கும்போது அதனை எடுக்கின்றனர்,வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இவர்கள் இந்த வேலையில் இறங்குகிறார்கள், ஏனெனில் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் தருவாயில் தேனீக்கள் இவர்கள் மீது கொட்டினால் உயிர்போகும் நிலைமை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த காரணத்தினாலேயே இந்த தேன் வேட்டையர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Tags: , , ,

Leave a Reply