
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இன்றைய தினம், ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மஹிந்த சமரசிங்க முஸ்லிம் நாடுகளிடம் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பிலும் அவர் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் சமரசிங்க ஏற்கனவே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















