கொலம்பியாவில் உள்ள எட்டு மாத குழந்தை ஒன்று அபார வளர்ச்சி அடைந்து ஆறு வயது குழந்தைக்கு உண்டான எடையை அடைந்துள்ளதால் அதன் பெற்றோர் அந்த குழந்தையை வளர்க்க டிரஸ்ட் ஒன்றின் உதவியினை நாடியுள்ளனர்.
கொலம்பிய நாட்டில் Eunice Fandiño என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று கடந்த எட்டு மாதங்களுக்கு முன் பிறந்தது. குழந்தைக்கு Santiago Mendoza என்று பெயர் வைத்தனர். Santiago Mendoza பிறக்கும்போதே அதிக எடையுடன் தான் பிறந்தான். ஆனால் அதன்பின்னர் எந்நேரமும் தாய்ப்பால் குடித்துக்கொண்டே இருந்ததாகவும், எதையாவது சாப்பிட கேட்டு அழுது கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Santiago Mendoza கடந்த எட்டு மாதத்தில் உடல் அபார வளர்ச்சி அடைந்து தற்போது 19.7 கிலோ எடையுண்ட உள்ளான். இவனது உடல் எடை ஆறு வயது குழந்தைக்கு சமமாக இருக்கின்றது. இவன் கொடுக்கும் தொந்தரவு தாங்க முடியாமல் இவனுடைய தாயார் Santiago Mendoza ஐ ஒரு டிரஸ்ட் ஒன்றிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
கொலம்பியாவில் உள்ள டிரஸ்ட் ஒன்று இந்த குழந்தையை எடுத்து வளர்க்க முன் வந்துள்ளது. இந்நிலையில் இந்த குழந்தையை டிரஸ்ட் அமைப்பினர் மருத்துவமனை சோதனை செய்ததில் குழந்தைக்கு பலவித நோய்கள் இருப்பதாகவும், உரிய முறையான சிகிச்சை இந்த குழந்தைக்கு தேவைப்படுவதாகவும் கூறினர். இந்த குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் டிரஸ்ட் செய்யும் என அதன் அமைப்பாளர் கூறினார்.

















