“ஸ்டாலினை துதி பாடவேண்டுமா? ஸ்டாலின் என்ன கருணாநிதியா?”

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தே.மு.தி.கவின் நிபந்தனையை தி.மு.க ஏற்காததால் தே.மு.தி.க, தி.மு.க கூட்டணி அமையவில்லை என்று தே.மு.தி.கவின் தலைவர் விஜய்காந்த் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

“காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து ஆலோசனை கூட்டங்களும் ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டு நானும் ஸ்டாலினை துதி பாடவேண்டுமா? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக கலந்து கொண்டிருப்பேன்.

2016 சட்டபேரவை தேர்தலில் குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என்று தே.மு.திக விரும்பியது. ஆனால் 40 தொகுதிகள் தர தயாராகவிருப்பதாக தி.மு.க தெரிவித்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனைக்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருந்தால் இப்போது அவரும் நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். தேர்தல் சமயத்தில் மற்றவர்களுக்கு முன் கருணாநிதியை சந்திக்க விரும்பினேன். மு.க ஸ்டாலினிடம் இது குறித்து பேசுமாறு தகவல் வந்தது. அவரை எனக்கு எப்போதும் பிடிக்காது. எனது மனச்சாட்சி அவரை ஏற்றுக்கொண்டதில்லை.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!