தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியாது என அவர் அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்தப்படும் தினத்திற்கு முன்னதாக சகல இந்திய மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சகல மீனவர்களும், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே எதிர்வரும் 25ம் திகதி திட்டமிட்டவாறு கொழும்பில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை நடாத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ள நிலையில் இலங்கைக் கடற்படையினர் புதுச்சேரியைச் சேர்ந்த 75 மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

















