ரூகி பெர்னாண்டோ – வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோரது கடவுச்சீட்டுகள் பறிமுதல் :

rukki_CI

பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுவிடுவிக்கப்பட்ட ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர்pன் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிரு;ந்தனர்.

இந்த கைதுகள் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம், ரூகி பெர்னாண்டோவிற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரினதும் கைதுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையில் எதிரொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply