இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட்சபை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரப் பிரிவுத் தலைவர் பொப் மெனிடாஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மனத உரிமை நிலiமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும், நாளுக்கு நாள் பாதகமான நிலையை நோக்கி நகர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டாத வரையில் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான சர்வதேச பொறிமுறையின் அவசியம் உணரப்பட்டுள்ளதாகவும், சாவதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டிய செய்தி தொடர்பில் ஏனைய தரப்புக்களுக்கு இடையில் இணக்கப்பாடு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரங்களில் இலங்கை காத்திரமான முனைப்புக்கள் எடுக்கும் வரையில் சர்வதேச சமூகம் ஓயக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய முனைப்பு காட்டப்படாவிட்டால் இலங்கையில் மீளவும் பிரிவினைகள் தலைதூக்க சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்பட N;வண்டியது அவசியமானது அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

















