உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடம்

sri_lanka_flag

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடத்தை வகித்து வருகின்றது,ஐக்கிய நாடுகள் அமைப்பு மார்ச் 20ம் திகதி உலக மகிழ்ச்சி தினமாக அறிவித்துள்ளது.உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை மிகவும் பின்னிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் டென்மார்க், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றன.உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் கடைநிலை வரிசையின் இருபது இடங்களில் ஒன்றையே இலங்கை வகித்து வருகின்றது.தென் ஆசிய பிராந்திய வலயத்தில் இலங்கை மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.அண்டை நாடான இந்தியா 111ம் இடத்தை வகிக்கின்றது.

மாலி, உகண்டா, பலஸ்தீனம், சிம்பாப்வே, ஹெய்ட்டி, சூடான் ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் அமெரிக்கா 17ம் இடத்தை வகிக்கின்றது.கடைசி இடமான 156ம் இடத்தை ஆபிரிக்க நாடான டோகோ வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply