Greater Manchester என்ற பகுதியில் ஒரு மாதமாக ஒரு கொள்ளைக்கும்பல் முயற்சி செய்து சுரங்கம் தோண்டி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மிகப்பெரிய கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த மார்ச் 14ஆம் தேதி Greater Manchester பகுதியில் உள்ள Tesco store in Eccles என்ற சூப்பர் மார்க்கெட்டில் ஒரு அதிர்ச்சி கொள்ளை நடந்துள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டில் எதிரே உள்ள ஒரு இடத்தில் இருந்து சுமார் 50 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி மில்லியன் கணக்கான பவுண்டு மதிப்புள்ள ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அந்த சுரங்கத்தை பார்க்கும்போது கண்டிப்பாக இந்த சுரங்கம் ஒரே நாளில் தோண்டப்பட்டது அல்ல என்றும் குறைந்தது ஒரு மாத காலமாவது இந்த சுரங்கம் தோண்டுவதற்கு கொள்ளையர்கள் காலநேரம் எடுத்திருப்பார்கள் என்றும் தெரிய வருகிறது.
சூப்பர் மார்க்கெட்டின் எதிரே யாரும் கவனிக்க முடியாத ஒரு இடத்தில் இருந்து சுரங்க வேலையை ஆரம்பித்துள்ள கொள்ளையர்கள் அங்கேயே ஒரு மாத காலம் தங்கியிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுரங்கம் தோண்டி மார்ச் 14 அன்று மிகப்பெரிய கொள்ளையை நடத்திவிட்டு தப்பித்துள்ளனர். இவர்களை பிடிக்க Greater Manchester போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே பகுதியில் 100 அடி தூர சுரங்கம் அமைத்து ஏ.டி.எம் மையத்தில் இதுபோன்ற ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















