இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிறுவப்பட்ட விசேட நீதிமன்றமொன்றைப் போன்றதொரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு பிரித்தானியா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சியரே லியோனில் விசேட சர்வதேச நீதிமன்றமொன்றினால் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அதே போன்றதொரு நீதிமன்றை அமைத்து இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையினால் இவ்வாறு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.நீதிமன்ற விசாரணைகளின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

















