
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 74 மீனவர்கள் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுடன் 18 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டிருந்தன.
மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.எனினும், இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசிப்பதாகவும் இதனால் கைதுகளை தவிர்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















