தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிசாந்த ஸ்ரீவர்னசிங்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் ஆயுதங்களை ஏந்தி யுத்தம் செய்ததாகவும், விக்னேஸ்வரன் அரசியல் சாசனத்துடன் யுத்தம் புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் என்ற வரப்பிரசாதங்களை அனுபவித்து வரும் விக்னேஸ்வரன் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், கூட்டமைப்பை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சர்வதேச சவால்களை முறியடிப்பதற்கு இணைந்து செயற்பட வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் தலையாய கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

















